Friday, March 13, 2009

யுரேகா! யுரேகா!





ஏன் நியூட்டன் இங்கு தோன்றவில்லை எனக் கண்டுபிடித்துவிட்டேன்.

இதைப் பார்த்துக்கொண்டு நிற்கும் எந்த நியூட்டனுக்குத்தான் புவியீர்ப்பு விசை பற்றி சிந்திக்கத் தோன்றும்?

இடம்: சிங்காரச் சென்னையின் முக்கியப் பகுதியான தியாகராய நகர் துரைசாமி கீழ்ப்பாலம் அருகாமையில்.

என்ன கொடுமை சார் இது?

அட, நீங்க வேற!..
இந்தக் கொடுமையெல்லாம் நம்ம சென்னையிலதாங்க...

வரிகளும், வலிகளும்...


மென்பொருள் நிறுவன ஊழியர்களின் சமுதாய அக்கறையினைப் பறைசாற்றும் விதமாய், சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணா நிலை அறப்போரில் நெஞ்சைச் சுட்ட கருத்து.
இடம்: கோயம்பேடு புறநகர்ப்பேருந்து நிலையம் அருகில், சென்னை.
நாள்:14 டிசம்பர், 2008

Monday, February 16, 2009

ஆல் டைம் அசத்தல் காமெடி

தொண்டர் : தலைவரே ஈழமக்கள் இன்னமும் உங்களை நம்பிக்கிட்டிருக்காங்களே? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க?

தலைவர் : உடன்பிறப்புகளே! உங்களுக்கெல்லாம் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறேன்?

தொண்டர் : ஒண்ணுமே செய்யலீயே தலைவா..

தலைவர் : அதுதான் அவங்களுக்கும்..

-நன்றி‍ "லக்கி லுக்"

Sunday, December 14, 2008

M.R.இராதாவின் மலேசிய உரை பாகம் - 1 & 2



நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் மலேசிய உரையை இத்துடன் இணைத்துள்ளேன். கேளுங்கள்... வார்த்தை வீச்சுக்களை மதிப்பிடுங்கள். இன்றும் கூட அவருக்கான தளமான, திரைப்பட மற்றும் நாடகத்துறையில் அவர் விட்டுச் சென்ற இடமானது நிரப்பப்பட முடியாமலே உள்ளது.




Wednesday, November 26, 2008

தமிழில் நீளமான 'பாலிண்ட்ரோம்'(Palindrome)

முதலில் 'பாலிண்ட்ரோம்' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி விடுகின்றேன். வலம் இடமாக அல்லது இடம் வலமாக எந்த திசையில் (முன்னாகவும் பின்னாகவும்) வாசித்தாலும் ஒரே வடிவம் மற்றும் பொருள் தரும் வார்த்தை அல்லது வாக்கியம். இதற்கு சரியான தமிழ்ச்சொல் மறந்துவிட்டேன்(கண்டிப்பாக விரைவில் கூறிவிடுகின்றேன். யாருக்காவது தெரிந்தாலும் கூறலாம்).


நண்பர் சந்திரமௌளீ(நன்றி) அவர்களின் உதவியால் மேற்கண்ட ஐயம் தெளிந்தது.

இதன் தமிழ் வடிவம் "மாலை மாற்று" .


சிறு உதாரணங்கள் -
'மாலா போலாமா?'
'தேரு வருதே'

தமிழின் நீளமான இவ்வகை அமைப்பு-
'யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா' - திருஞான சம்பந்தரின் மாலை மாற்றுப் பதிகத்திலிருந்து.

இதன் பொருள் - 'சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருத்தமா? நீ ஒருவனே கடவுள் என்றால். பொருந்தும். ஆம் ஆம்!'

- மூலம்- அமரர் 'சுஜாதா' வின் 'கற்றதும்... பெற்றதும்...'